Our Feeds


Friday, September 22, 2023

SHAHNI RAMEES

ரஷ்யா பெட்ரோல்-டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை

 

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். 



ரஷ்யாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. இந் நிலையில் உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. 



ரஷ்யா ஒரு நாளைக்கு 9 இலட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 60 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் பேரல்கள் என்ற வகையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 



இந்த உத்தரவு வந்த நிலையில், ரஷ்யாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தற்காலிக தடையால் உலக சந்தையில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 



யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு இந்த தடை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »