கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜர்
கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.அவரது கொலையில் விசாரணை மற்றும் நீதி வழங்கப்படுவதற்கு கனடாவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியாவிற்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (21) அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
'இந்த விஷயத்தை (நிஜ்ஜர் கொலை) இந்திய அரசாங்கம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் முழு வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தவும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தவும் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவித்துள்ளார்.