மொராக்கோவில் பூகம்பத்திற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கதிஜாவின் குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை, ஆனால் அந்த குழந்தையின் முதல் வீடு வீதியோரத்தில் உள்ள கூடாரம்.
வெள்ளிக்கிழமை இரவு மொராக்கோவை பாரிய பூகம்பம் தாக்குவதற்கு சிலநிமிடங்களிற்கு முன்னர் கதிஜாவின் குழந்தையை பெற்றெடுத்தார்.
தாயும் குழந்தையும் காயங்களுக்குள்ளாகாத போதிலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை குழந்தை பிறந்து மூன்று மணித்தியாலங்களில் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.
சிறிய தொடர்ச்சியான அதிர்வுகள் காணப்படலாம் என்பதால் நாங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்தார் கடிஜா.
மராகெஸிலிருந்து புதிதாக பிறந்த குழந்தையுடன் டடார்ட்டில் உள்ள தங்கள் கிராமத்திற்கு அந்த குடும்பத்தினர் செல்ல முயன்றனர்.
எனினும் மண்சரிவு காரணமாக அது சாத்தியமாகவில்லை இதன் பின்னர் அவர்கள் முக்கிய வீதியின் ஒரத்தில் கூடாரத்தில் வாழ்கின்றனர்.
எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என தனது பிள்ளையை கையில் தூக்கிவைத்தபடி அவர் தெரிவித்தார்.
குழந்தைக்கு போர்த்துவதற்கு ஏதாவது கொடுங்கள் என கேட்டோம் என தெரிவித்த அவர் கடவுள் மாத்திரமே எங்களுடன் இருக்கின்றார் எனவும் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் அவர்கள் அடிப்படைவசதிகளுடன் கூடாரமொன்றை உருவாக்கியுள்ளனார்.