மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த சந்தேக நபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் மஹியங்கனை பூஜா பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.