பாக்கிஸ்தான் கிரிக்கெட்டின் ஊடக முகாமையாளர் உமார்பாறுக் கல்சனும் கட்டுப்பாட்டுச்சபையின் மற்றுமொரு அதிகாரியும் கொழும்பில் உள்ள கசினோவிற்கு சென்றமை கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
இருவரும் கொழும்பில் கசினோவிற்கு சென்றதை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
இருவரும் ஆசிய கிண்ணப்போட்டியில் விளையாடும் பாக்கிஸ்தான் அணியுடன் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் கசினோவிற்கு சென்றுள்ளமை ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்தை நிச்சயமாக ஈர்க்கப்போகின்றது .
ஐசிசியினால் தடை செய்யப்பட்ட இடங்களில் கசினோவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பாக்கிஸ்தான் அணியின் ரசிகர்கள் இது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
சூதாட்டத்தில் பாக்கிஸ்தான் அணி அதிகாரிகள் எவ்வாறு ஈடுபடமுடியும் எவ்வாறு இப்படி சிறுபிள்ளைத்தனமாக பொறுப்பில்லாமல் நடந்துகொள்ள முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆசிய கிண்ணத்தி;ற்காக பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் பல வீரர்கள் இலங்கை சென்றுள்ளதையும் அணியின் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
இதேவேளை தாங்கள் இரவு உணவிற்காகவே கசினோவிற்கு சென்றதாக இரு அதிகாரிகளும் தெரிவித்துள்ளதை பலர் சமூக ஊடகங்களில்கேலி செய்துள்ளனர்.
முன்னாள் பாக்கிஸ்தான் வீரர்களும் இதனை கேலி செய்துள்ளனர்.
உணவுக்காக கசினோவிற்கு யார் போவார் உணவிற்காக சூதாட்ட விடுதிக்கு யாராவது செல்வார்களா அவர்கள் எங்களை மடையர்களாக்க முயல்கின்றனர் என ஒமார்அலவி என்ற கிரிக்கெட் எழுத்தார் எழுதியுள்ளார்.