நீர்மின் உற்பத்தி 14 வீதம் வரை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்கின்ற போதிலும், நீர் மின் நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறட்சியினால் நீர் மின் உற்பத்தி கடந்த நாட்களில் 11 வீதத்திற்கும் 12 வீதத்திற்கும் இடையில் வீழ்ச்சியடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.