கண்டி - பதியபெலெல்ல வீதியின் 16 ஆவது கட்டைக்கு அருகிலுள்ள விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிபொருட்களில் வெடிகுண்டு ஒன்றும் 9 LMG தோட்டாக்களும் 50 மில்லிமீட்டர் விமான எதிர்ப்பு தோட்டாவும் 3 கைக்குண்டுகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
119 என்ற இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.