Our Feeds


Wednesday, September 27, 2023

ShortNews Admin

என் குடும்பத்திற்கு குழந்தை பாக்கியத்தை இல்லாமலாக்கி விட்டார்கள் - மனைவியின் கர்ப்பப்பை அகற்றல்: கணவன் முறைப்பாடு



தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றிய சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவி செவ்வாய்க்கிழமை (26)    பிரசவத்துக்காக அன்று அனுமதிக்கப்பட்டார்.

தனது மனைவிக்கு புதன்கிழமை (27) சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.  இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டது. அத்துடன், எனது மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

இவை மருத்துவ தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து, அந்த பெண்ணின் கணவரான  இராதுரை சுரேஸ் என்பவர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளார்.

தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு  தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.தமிழ்ச்செல்வன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »