Our Feeds


Friday, September 8, 2023

Anonymous

சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் சுத்தப்படுத்துபவர் - சரத் பொன்சேகா காட்டம்



புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்க்களின் பாதுகாவலன் அத்துடன் ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் சுத்தப்படுத்துபவர் என்றும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது என்றும் தெரிவித்த முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அது குறித்து விசேட கவனம் செலுத்தி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தினார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலனாய்வுப் பிரிவின் பிரதானியான சுரேஷ் சலே தொடர்பில் சனல் 4 காணொளியில் பல விடயங்கள்  கூறப்பட்டுள்ளன. 

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது புலனாய்வு பிரிவில் இருந்து கொண்ட, பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் சலே புலனாய்வு பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.

சனல் 4 வெளியிட்டுள்ள ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காணொளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது .

தெரிவுக்குழுக்கள் எவ்வாறு செயற்படும் என்பதை நாம் அறிவோம். ஆகவே சனல் 4  வெளியிட்ட விடயங்களை பாராளுமன்ற தெரிவுகுழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது.எனவே  சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »