Our Feeds


Friday, September 29, 2023

SHAHNI RAMEES

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இலங்கையின் இரு பல்கலைக்கழகங்கள்...!

 

இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக கொழும்பு மற்றும் பேராதனைல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

 “Times Higher Education World University” 2024 தரவரிசையின் அடிப்படையில் இவை இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

எனினும் இந்த பல்கலைக்கழகங்கள் இரண்டும் குறித்த தரவரிசையில் முதல் 1000 இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை.

 

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழங்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசையில் 1,001 முதல் 1,200 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.

 

2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 1,000 இடங்களுக்குள் இலங்கையின் இரண்டு பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »