சீதுவ, தண்டு கன் ஓயா கரையில் அண்மையில் பயணப் பைக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உயிரிழந்தவரின் வலது காதுக்குக் கீழே பச்சை குத்தப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடைய ஆண் என தெரிவித்த பொலிஸார், சடலம் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.