போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பெண் ஒருவரின் சொத்துக்களை கண்டி மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக கண்டி – குண்டசாலை – மஹவத்த பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த பெருந்தொகை சொத்துக்களே இவ்வாறு நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த சொத்துக்கள் குண்டசாலை பிரதேச செயலாளரின் பொறுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்களை சேகரித்தமை குறித்த விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.