யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (10) கோப்பாய் இராச வீதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.