நாட்டின் தண்டனையில்லா கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இலங்கை மக்கள் "எதிர்காலத்தில் அதிக அழிவையும், இருளையும் சந்திக்க நேரிடும்" என்று நம்புவதாக உலகத் தமிழர்; பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக உலக தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் முக்கிய பகுதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் “முழுமையாக நிராகரித்திருப்பது" இலங்கையில் பொறுப்புக்கூறல் எதிர்பார்ப்புகளின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுவதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த நம்பிக்கையற்ற யதார்த்தத்தில், இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறலுக்கான ஒரே நம்பிக்கை, மனித உரிமைகள் பேரவையின் அடிப்படையிலான பொறுப்புக்கூறல் திட்டமாகும்.
அத்துடன், இந்த முக்கியமான பணியை புதுப்பித்தமைக்கான உயர் ஸ்தானிகருக்கு நன்றி தெரிவிப்பதாக உலக தமிழர் பேரவை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.