அதிகளவு பணம் செலவிடப்படும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று மொழிகளிலும் பகுப்பாய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அலரி மன்றில் இன்று (08) நடைபெற்ற “தேசிய மதிப்பீட்டுக் கொள்கை கட்டமைப்பை” வெளியிடும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தேசிய கொள்கைப் பொறிமுறையின் அடிப்படையில் மின்சார விநியோகத்தை அனுமதிக்க முடியும் என்றார்.