நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி பானந்துகம பிரதேசத்தில் இருந்து நில்வளா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து சிறியளவிலான வௌ்ளப்பெருக்கு நிலைமை எட்டுள்ளது.
மேலும், தலகஹகொட பிரதேசத்தில் உள்ள நில்வளா ஆற்றின் நீர் மட்டம் அவதான மட்டத்தை எட்டுள்ளது.
இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் கனமழை காரணமாக அதிகரித்து வருகிறது.
ஜிங் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதுடன், பத்தேகம, தவலம பிரதேசங்களில் அவதான மட்டத்தை எட்டுள்ளது.
களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.