குருநாகல் மாவட்டத்தில் நபரொருவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இளைஞர்கள் குழுவினால் தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிகவெரட்டிய பன்சியகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கசிப்பு கடத்தல்காரர் என கூறப்படும் நபரின் வீட்டில் விருந்தினை முடித்து விட்டு குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வீட்டிற்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இளைஞர்கள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் இந்த சார்ஜென்ட்டை தாக்கியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து குறித்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.