Our Feeds


Saturday, September 23, 2023

ShortNews Admin

சிகரட்டுக்கு தடை விதிக்க தயாராகும் இங்கிலாந்து - புதிய சட்டம் வருகிறது



இங்கிலாந்தில் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை  பிரதமர் ரிஷி சுனக்  மேற்கொண்டுள்ளார். 


இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 



இது தொடர்பில் இங்கிலாந்து அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய செய்தி குறிப்பில்,



இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகை பிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது இலட்சியம். புகைப் பழக்கத்தில் இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »