Our Feeds


Tuesday, September 12, 2023

SHAHNI RAMEES

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்-உரிய விசாரனை நடத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தல்

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரனையை சர்வதேச உதவியுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுமையான பங்களிப்புடனும் மேற்கொள்ள வேண்டும்  என ஐ.நா. மனித உரிமைகள் பிரதி உயர்தானிகர் நேற்று (11) தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பிரதி உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீவ் ஜெனீவாவில் உள்ள இலங்கை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை பேரவையில் நேற்று(11) சமர்ப்பித்தார்.



இலங்கை அரசாங்கம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் மற்றும் வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அப்போது அவர் கூறினார். ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுவெடிப்பு உட்பட உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க எனவும் அவர் வலியுறுத்தினார்.



"உண்மையைத் தேடுவது மட்டும் போதாது, பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்புடன் இலங்கை இருக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »