இலங்கை இன்னமும் நெருக்கடிகளில் இருந்து விடுபடவில்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சீர்திருத்த முயற்சிகளில ஈடுபட்டுள்ள வீழ்ச்சியடைந்து பொருளாதாராத்தை கையாள்கின்ற பொதுமக்களின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க முயல்கின்ற தருணத்தில் இலங்கை இன்னமும் நெருக்கடிகளில் இருந்து விடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் பரிந்துரைகளில் தொடர்ந்தும் கவனம் செலுத்தும் இரண்டாம் தவணை நிதிஉதவிக்கான பணியாளர் மட்ட உடன்படிக்கையை சாத்தியமாக்குவதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதிய பிரதிதிநிதிகளின் விஜயத்தின் போது பணியாளர் மட்ட உடன்படிக்கை சாத்தியமாகாதது குறிப்பிடத்தக்கது.