Our Feeds


Monday, September 25, 2023

ShortNews Admin

சரத் வீரசேகரவுக்கு அமெரிக்கா விசா கிடைக்காதா? - ஐலண்ட் செய்தி



நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதை அமெரிக்க தூதரகம்  தாமதிக்கின்றது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ள இலங்கை நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள சரத் வீரசேகரவிற்கு விசா வழங்க முடியாது அவருக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமியுங்கள் என அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதால் சர்ச்சை மூண்டுள்ளது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிறுவகம் யு எஸ் எயிட்டின் நிதிஉதவியுடன் இலங்கையின் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர்களிற்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 20 நாடாளுமன்ற மேற்பார்வை குழுக்கள் உள்ளன அவற்றிற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிலையம் ஆதரவளிக்கின்றது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு  இன்று கடிதமொன்றை எழுதவுள்ளதாக சரத்வீரசேகர தெரிவித்துள்ளார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து சபாநாயகர் அமெரிக்க தூதுவரிடம் விளக்கமொன்றை பெறுவார் என நம்புகின்றேன் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது விமர்சனங்களால் அமெரிக்கா அதிருப்தியடைந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும்  என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்றத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர  எனக்கு விசா வழங்கத் தவறியுள்ளமை குறித்து தெளிவான விளக்கம் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »