நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை
என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அவ்வாறு சட்டமா அதிபர் அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் என குறிப்பிட்டுள்ளார்முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ சரணவராஜா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து அவர் இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
குருந்தூர்மலை விவகாரத்தில் அவர் வழங்கிய கட்டளைகளுக்காக உயிர் அச்சுறுத்தலையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டதாக தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டீ சரவணராஜா சட்டமா அதிபர் தன்னை அழைத்து நீதிமன்றக்கட்டளைகளை மாற்றியமைக்கும்படி கேட்டுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை,நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மாத்திரம் அதற்கான அதிகாரமுள்ளது.
ஆனால் சட்டமாஅதிபர் உண்மையிலேயே அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தினை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயலும் அரசாங்கத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துகின்றது.
சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.என அவர் தெரிவித்துள்ளார்.