Our Feeds


Tuesday, September 26, 2023

SHAHNI RAMEES

மலேசியாவில் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்ட இலங்கையர் இருவர் கைது

 

மலேசியாவில் மூன்று இலங்கையர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இலங்கையர் இருவரும் கோலாலம்பூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

மலேசியாவின் சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (22) இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளது.

 

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும், இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

 

சம்பவம் இடம்பெறுவதற்கு 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டுக்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில், அவர்களே இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வீட்டை சோதனை செய்த பொலிஸார், கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, முகங்கள் பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டிருந்த நிலையில், மூவரின் சடலங்களையும் கண்டெடுத்துள்ளனர்.

 

உயிரிழந்த மூன்று இலங்கையர்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், செந்தூலில் உள்ள இலங்கை தம்பதியருக்குச் சொந்தமான கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் சந்தேக நபர்களான இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களை பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த நிலையில், அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »