உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய புனித மைக்கல் தேவாலயத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் நேர்மையான அதிகாரிகள் மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக் கொண்டால், அரசியல் அழுத்தத்தின் கீழ் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால், சர்வதேசத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, இவை அனைத்தும் வெளிப்படையான வழிமுறைகளின் மூலம் செய்யப்பட வேண்டும் என்று பேராயர் மேலும் குறிப்பிட்டார்.