கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவிக்கையில்,
எனவே தேவை ஏற்பட்டால் ஏனைய நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இன்று (13) காலை சுமார் 40 அலுவலக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டைக்கு 15 காலை ரயில் பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் இருந்து கொழும்புக்கு காலை 04 ரயில் பயணங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
களனிவெளியில் இருந்து கொழும்பு கோட்டை வரை 4 ரயில் பயணங்களும், கரையோரப் பாதையில் 17 ரயில் பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளன..
அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளுக்காக தூர மாகாணங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு நேர அஞ்சல் ரயிலை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.