Our Feeds


Friday, September 22, 2023

ShortNews Admin

சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்கத் தயார் - ஜெனீவாவில் ஆசாத் மௌலானான அறிவிப்பு



ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிப்பதற்கு தான் தயார் என ஆசாத் மௌலானா அறிவித்துள்ளார்


ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றில் தான் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்


பிரித்தானிய சேனல் 4 தொலைகாட்சி மூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படம் இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


அத்துடன் இந்த ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஆதரவை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்


இதேவேளை தனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.


பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் தான் பணியாற்றிய போதும், தான்ஆயுத பயிற்சி பெற்ற போராளி அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.


இதன் காரணமாகவே ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பான முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்கள் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »