சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மறைந்த மு.க தலைவர் அஷ்ரபின் நினைவு தினம் 16ம் திகதி சாய்ந்தமருது லீ மெரீடியன் அரங்கத்தில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மு.க தலைவர் ரவுப் ஹக்கீமினால் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் குறித்த நிகழ்வுக்கு சாய்ந்தமருதில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் குறித்த நிகழ்வு 16ம் திகதி கல்முனை சாந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் நடப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.