Our Feeds


Tuesday, September 12, 2023

ShortNews Admin

ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பதற்காக குண்டுதுளைக்காத விசேட ட்ரைனில் புறப்பட்டார் வடகொரிய அதிபர் கிம்.



ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக வடகொரிய தலைவர் கிம்ஜொங் அன் ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.


கடந்த நான்கு வருடங்களில் வடகொரிய தலைவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரிய தலைவர் தனது விசேட புகையிரதத்தில் ரஸ்யா நோக்கி பயணமாவதை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவின் மத்திய செய்தி முகவர் அமைப்பு இந்த படத்தினை வெளியிட்டுள்ளது.

 இன்று இந்த சந்திப்பு இடம்பெறலாம் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரிய தலைவரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்கள் மர்மமானவை என்ற போதிலும் அவர் தனது விசேட புகையிரதத்திலேயே விஜயங்களை மேற்கொள்வது வழமை.

குறிப்பிட்ட புகையிரதம் பச்சை நிறத்திலானது அதற்குள் 20 விசேட வாகனங்கள் காணப்படும் புகையிரத்திற்குள் கிம் ஜொங் அன் கூட்டங்களை நடத்துவதற்கான வசதியும் உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »