நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) அதிகாலை ஜேர்மனி நோக்கி புறப்பட்டார்.ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 5.05 அளவில் கட்டார் நோக்கி பயணித்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர்.659 ரக விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
கட்டாரில் இருந்து அவர்கள் ஜேர்மனி நோக்கி செல்லவுள்ளனர்.