Our Feeds


Friday, September 22, 2023

SHAHNI RAMEES

இஸ்லாமிய தினப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது கொழும்பு பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி

 



பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி 2023

பள்ளிகளுக்கிடையேயான வருடாந்திர இஸ்லாமிய தினப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது

21/09/2023


கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு வெஸ்லி கல்லூரியினால் நடாத்தப்பட்ட 51வது வருடாந்த பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய தினப் போட்டிகளில் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி ஒட்டு மொத்த சம்பியனாகியுள்ளது.

போட்டிகள் 13 செப்டம்பர் 2023 அன்று வெஸ்லி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


18 பாடசாலைகள் பங்குபற்றியதுடன் 400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிட்டு அதிகூடிய புள்ளிகளை (நான்கு முதலாம் இடங்கள், மூன்று 2ம் இடங்கள் மற்றும் நான்கு 3ம் இடங்கள்) பெற்றதன் மூலம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்று முதன்முறையாக சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »