இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா இந்தியா சீனா போன்ற நாடுகளின் அழுத்தங்களின் கீழ் வாழப்பழகியுள்ளன எனஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மனியில் தெரிவித்துள்ளார்.
பேர்லின் உலகளாவிய பேச்சுவார்த்தையில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் ஒருங்கிணைந்த திட்டம் எனகருதப்படுகின்றது இலங்கை போன்ற அதில் தொடர்புபட்டுள்ள நாடுகள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றன.
இது உலகி;ன் தென்பகுதியின் வளர்ச்சியை மேலும் பாதிக்கும்.துருவமயப்படுத்தல் மேலும் வெளிப்படையாக தென்படும். ஏன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா இந்தியா சீனா போன்ற நாடுகளின் அழுத்தங்களின் கீழ் வாழப்பழகியுள்ளன – என்ன சொல்கின்றேன் என்றால் எங்களிற்கு இது புதிய விடயமல்ல.எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தக்கதருணத்தில் வழங்கிய உதவிகளிற்காக அவர் உலக வங்கிக்கும் யுஎஸ்எயிட் அமைப்பின் அதிகாரி சமந்தா பவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
இலங்கைவங்குரோத்து நிலையை அடைந்தவேளை அனைத்து வெளிநாட்டு உதவிகளும்; நிறுத்தப்பட்டன இல்லாமல்போயின அதன் பின்னர் அரசியல் நெருக்கடி உருவானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலகவங்கியும் எனது பழைய நண்பி சமந்தாபவரும் உதவிவழங்காவிட்டால் நான் இங்கு இன்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்காது.நான் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.