Our Feeds


Sunday, September 3, 2023

SHAHNI RAMEES

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்


G-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி

ஜோ பைடன் இந்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இது தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் , எதிர்வரும் 7 ஆம் திகதி ஜோ பைடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.




இந்த விஜயத்தின் போது அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் எதிர்வரும் 8 ஆம் திகதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




புதுடெல்லியில் எதிர்வரும் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் G-20 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.




அத்துடன் G-20 மாநாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலைமை என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »