உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் – 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.
” சனல் – 4 தொடர்பில் விசாரணை அவசியம் என ஐநாவும் வலியுறுத்தியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஐநாவின் இலங்கை பிரதிநிதியை சந்தித்து, சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
4 வருடங்களாக என்னை இலக்கு வைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் நடந்தது என்ன என்பது சனல் – 4 காணொளி ஊடாக தெளிவாகின்றது.” – என்றார்.