Our Feeds


Tuesday, September 12, 2023

ShortNews Admin

நால்வருக்கு மரணதண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு



கூரிய ஆயுதங்களினால் தாக்கி நபரொருவரை கொலைச்செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நால்வரை குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களுக்கு மரணதண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பளித்துள்ளது. 


1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி களுத்துறை மதினகந்த பிரதேசத்தில் கூரிய மற்றும் மழுங்கிய ஆயுதங்களில் தாக்கி நபரொருவரை கொலை செய்தமை மற்றும் மேலும் ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் 07 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 



வழக்கில் 1,2,3 மற்றும் 5 ஆகிய குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கே இவ்வாறு மரணத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் 6 மற்றும் 7 ஆம் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை விடுதலை செய்வதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். 



அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்காவது நபர் உயிரிழந்துள்ளதாக மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

நீண்ட விசாரணைகள் இடம்பெற்ற இந்த வழக்கில் 14 போிடம் சாட்சிப் பெறப்பட்டிருந்தது. 



அதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட தொடர் வழக்கு விசாரணைகளை தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நால்வரும் குற்றவாளிகளாக அறிவித்து களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் அவர்களுக்கு நேற்று (11) மரணத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »