முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இராணுவ பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை - பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே குறித்த பேருந்துக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நுகேகொட நீதிவானிடம் முன்னிலைப் படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ளது.