2023 ஐசிசி ஒருநாள் உலக கிண்ண தொடருக்கான அணியினை
பாகிஸ்தான் இன்று (22) அறிவித்துள்ளது.காயம் காரணமாக வேகப் பந்து வீச்சாளர் நசீம் ஷா இந்த அணியில் இடம்பெறவில்லை. நசீம் ஷாவுக்கு பதிலாக பதிலாக ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி, முறையே பயிற்சி போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
ஒக்டோபர் 6 ஆம் திகதி ஹைதராபாத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தனது உலகக் கிண்ண மோதலை ஆரம்பிக்கின்றது.