நாட்டின் வீதி அமைப்புக்கான வேகக்கட்டுப்பாட்டு வரம்புகளை புதுப்பிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
2012ஆம் ஆண்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு வரம்புகளை முறையாக நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நகரமயமாக்கல் மற்றும் பிற காரணிகள் இந்த வேகக் கட்டுப்பாடுகளை திறம்பட செயற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தடைகளை உருவாக்கியுள்ளன.
இந்த வேகக் கட்டுப்பாடுகளை புதுப்பிக்க குழு ஒன்று அமைக்கப்படுமென மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சட்ட அதிகாரி இந்திரதீப யோகசந்திர கூறுகிறார்.