ஷஷி வீரவங்சவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வேறு ஒரு நீதிவானுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
ஷஷி வீரவங்ச சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, நாளை (12) கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டதன் பின்னர், அந்த வழக்கை வேறொரு நீதிவானுக்கு வழங்க உத்தரவிட்டார்.