Our Feeds


Friday, September 29, 2023

News Editor

கடும் மழை, மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு


 நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதுடன்,  மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய  07 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப்பிரிவுக்கும் கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரலை பகுதிக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நில்வலா கங்கை பாணடுகமவில் சிறு வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

துனமலை அத்தனகலு ஓயா, பத்தேகம ஜின் ஆறு, மில்லகந்தவில் குடா ஆறு என்பனவும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »