வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
நீர் தாங்கி வீழ்ந்தமையினால் குறித்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
தாயாரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.