சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை செப்டம்பர் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு செப்டம்பர் 08 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக - பாராளுமன்றத் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.