கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகள் எதிர்வரும் செப்ரெம்பர்மாதம் 05ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென நீதிமன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாயில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் ,(31)இன்றும் குறித் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணைகளில் கனகசபாபதி வாசுதேவா, யாழ் சட்டவைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.கே.நிரஞ்சன், ரனித்தா ஞானராராசா, வி.எஸ்.எஸ் தனஞ்சயன், காணாமல் போனோர் அலுவரகத்தின் சட்டத்தரணிகளான எஸ்.துஸ்ஜந்தி, ஜெகநாதன் தர்ப்பரன், முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேசசசெயலர் உமாமகள் மணிவண்ணன், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம்அலுவலர், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் கா.சண்முகதாசன், கிளிளநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பொலிஸ்மாஅதிபர் சமுத்திரஜீவ, முல்லைத்தீவு உதவிபொலிஸ் அத்தியட்சகர் அசோகபெரேரா, கொக்கிளாய் பொலிஸ் நிலையஅதிகாரி, தடையவியல் பொலிஸ் பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர் முன்றிலையாகியிருந்தனர்.
இந் நிலையில் அனைத்தரப்பினருடைய ஒத்துழைப்புடன் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.