ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (24) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதியுடன் புறப்பட்ட குழுவினர் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கியூபாவின் ஹவானாவில் கடந்த 15ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்ற ஜி-77 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி முதலில் பங்கேற்றார்.
அதன்பிறகு, அமெரிக்காவில் கடந்த 19ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது ஆண்டு அமர்வின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.