எரிபொருள் விலை ஒவ்வொருநாளும் தானாகவே திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (13) தெரிவித்தார். இந்த நடைமுறை அடுத்த வருடம் முதல் அமுலாகும் என்றும் கூறினார்.
எரிபொருள் விநியோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகிப்பவர்கள் விற்பனை கொடுப்பனவு, புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் மசகு எண்ணெய் விற்பனை தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக காஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டார்.