ஸஹ்ரானும் அவனது குழுவினரும் மதத்துக்காக மரணிப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்து சிலர் உயிரிழந்தும் சிலர் சிறைகளிலும் உள்ளனர்.
இவர்கள் மதத்தின் பேரால் ஊக்குவிக்கப்படுவதற்கும், இவர்களின் மரணங்களை ஊக்குவிக்கவும் சில மதங்களும் உள்ளன. அதற்கு பின்னால் சில அரசியல் சக்திகளும், சர்வதேச சக்திகளும் உள்ளன. இதை காப்பாற்றுகின்ற அசாத் மௌலானா எடுக்கின்ற முயற்சி தான் இது என பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னோடும், என் அமைப்போடும் சேர்ந்து பயணித்த ஹன்ஸீர் அசத் மெளானா புகலிடக் கோரிக்கைக்காக அங்கு அவருடைய வாழ்க்கையை நிறுவிக் கொள்வதற்காக பல பொய்யான பிரசாரங்களை முன்வைத்திருக்கிறார். அவர் எமது அமைப்பிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகி ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் தற்போது அவர் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செனல் – 4 செய்தி சேவையில் இருந்து வந்த செய்தி குறித்து அச்சம் கொள்ளவேண்டிய தேவை எனக்கில்லை. இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஐ.எஸ் அமைப்பால் தான் மேற்கொள்ளப்பட்டது என அந்த அமைப்பே ஏற்கொண்டுள்ளது.
இவ்வாறு இருக்கையில் வெளிநாட்டு புகலிடம் கோரி சென்ற அசாத் மௌலானா இந்த விடயத்தை மறுப்பக்கம் திருப்ப நினைப்பதாக நான் நம்புகிறேன். ஸஹ்ரானும் அவனது குழுவினரும் மதத்துக்கான மரணிப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்து சிலர் உயிரிழந்தும் சிலர் சிறைகளிலும் உள்ளனர். இவர்கள் மதத்தின் பேரால் ஊக்குவிக்கப்படுவதற்கும், இவர்களின் மரணங்களை ஊக்குவிக்க சில மதங்களும் உள்ளன. அதற்கு பின்னால் சில அரசியல் சக்திகளும், சர்வதேச சக்திகளும் உள்ளன. இதை காப்பாற்றுகின்ற அசாத் மௌலானா எடுக்கின்ற முயற்சி தான் இது என்ற பலத்த சந்தேகம் எனக்கு இருக்கின்றது.
ஆகவே இதற்கு சர்வதேச விசாரணை நடத்தி அவரையும் இதற்குள் உள்வாங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றார்.