இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், எதிர்ப்பாளர்களை பியானோ இசைத்து மகிழ்வித்த அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த எதிர்ப்பாளர்களால், ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட நாளில் பாதுகாப்பிற்காக கான்ஸ்டபிள் தயாரத்ன நியமிக்கப்பட்டார்.
இதன்போது ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருந்த பியானோவில் அமர்ந்து, அதன் அறைகள் வழியாக சென்றுகொண்டிருந்த மக்களுக்கு பாடலை இசைத்திருந்தார்.
'கட்டிடத்தை சேதப்படுத்தும் போது தயாரத்ன பியானோ வாசித்துக் கொண்டிருந்தார்' என்று பெயர் வெளியிடாத ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு கான்ஸ்டபிள் ஒழுக்கத்தை மீறியதாக பொலிஸ் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.