Our Feeds


Friday, September 15, 2023

SHAHNI RAMEES

சீனாவின் உதவியுடன் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டம்

 

சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு இடம்பற்றுள்ளது.



இதன் நிறைவு விழாவில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கலந்து கொண்டு உரையாற்றினார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 



சீனா உதவியுடன் முதன்முறையாக வெனிசுலா நாட்டின் விண்வெளி வீரர்கள் நிலவு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.



இதற்காக வெனிசுலா நாட்டில் இருந்து இளைஞர்கள் பலர் சீனாவில் பயிற்சி பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். 



இந்த சந்திப்பின்போது உணவு ஏற்றுமதி, தகவல் தொடர்பு, சுற்றுலா உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »