இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை அடுத்த 4 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால் நேற்று (9) முதல் இந்த இறக்குமதி வரி அடுத்த நான்கு மாதங்களுக்கு அமுலில் இருக்கும்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு அரசாங்கம் தற்போது 50 ரூபா வரி அறவிடுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.