உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு விமான நிலையத்தில் உக்ரைன் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோரை கனடா பிரதமர் நேரில் வரவேற்றார்.
அதன்பின், அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சென்றார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் கனடா பிரதமர் தெரிவிக்கையில்
நேட்டோ உள்ளிட்ட நமது நண்பர்களுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம். உக்ரைனுக்கு அடுத்த வருடமும் தொடர்ந்து கனடா அரசாங்கம் பொருளாதார உதவிகளை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் நாங்கள் விரும்புவது உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு இராணுவ உதவிகளோ அல்லது பொருளாதார உதவிகளோ தேவைப்படாத வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான். நிரந்தரமான அமைதி என்பது இராணுவத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும். உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.