கம்பஹா மாவட்டத்தில் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் இந்த ஆண்டு மாத்திரம் 1,439 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 320 ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் என தெரிவித்தார்.